புவனகிரியில் பெண் கொலை: இளைஞர் கைது

புவனகிரியில் பெண் கொலை: இளைஞர் கைது
Updated on
1 min read

புவனகிரியில் சில தினங்களுக்கு முன்பு புதுச்சேரி பெண் சத்யா உயிரிழந்து கிடந்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதில்உயிரிழந்த சத்யாவுடன் சம்பவத் தன்று இளைஞர் ஒருவர், தனியார் நிதி நிதி நிறுவனம் அருகில் உள்ள மாடிக்கு சென்றுள்ளார். சில மணி நேரம் கழித்து இளைஞர் மட்டும் திரும்பி வந்துள்ளார். இளைஞர் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தினர். அந்த இளைஞர் சேத்தியாத்தேப்பு அருகே உள்ளதரசூர் கிராமத்தைச் சேர்ந்த முரசொலிமாறன் (28) என்பது தெரியவந்தது.

அவர் தற்போது ஆயிபுரத்தில் குடியிருந்து வருகிறார். அவருக்கும் சத்யாவுக்கும் கூடா நட்பு இருந்துள்ளது. அடிக்கடி சத்யா புவனகிரி வந்து முரசொலிமாறனுடன் தங்கி சென்றுள்ளார். இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் சத்யா கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரியவந்தது. தலைமறைவாக இருந்த முரசொலிமாறனை தனிப்படை போலீஸார்நேற்று வடலூரில் கைது செய்தனர். அப்போது அவர் மயங்கிய நிலையில் இருந்தார். தான்தற்கொலை செய்து கொள்வதற் காக காதில் விஷத்தை ஊற்றிக் கொண்டதாக அவர் போலீஸில் கூறியுள்ளார்.

போலீஸார் முரசொலிமாறனை சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்த்து கண்காணித்து வரு கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in