Published : 04 Jan 2021 03:21 AM
Last Updated : 04 Jan 2021 03:21 AM

பெரம்பலூர், தஞ்சாவூர் உட்பட 7 மாவட்டங்களில் குரூப் 1 முதல்நிலை தேர்வு 50% பேர் மட்டுமே பங்கேற்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) மூலம் துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர், வணிகவரித் துறை உதவி ஆணையர், கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர், ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குநர், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் மாவட்ட அதிகாரி உள்ளிட்ட 66 காலிப் பணியிடங்களுக்கான குரூப் 1 முதல்நிலை தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்டத்தில் 9 மையங்களில் குரூப் 1 தேர்வெழுத 2,489 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில், 1,271 பேர் மட்டுமே நேற்று தேர்வெழுதினர். 1,218 பேர் தேர்வெழுத வரவில்லை. அரியலூர் மாவட்டத்தில் 9 மையங்களில் 1,348 பேர் தேர்வெழுதினர். 1,051 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை. தேர்வு மையங்களில் ஆட்சியர் த.ரத்னா ஆய்வு செய்தார்.

கரூர் மாவட்டத்தில் 11 மையங்களில் தேர்வெழுத 3,139 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில், 1,591 பேர் மட்டுமே தேர்வெழுதினர். 1,548 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை. கரூர் அரசு கலைக் கல்லூரி தேர்வு மையத்தில் ஆட்சியர் சு.மலர்விழி ஆய்வு செய்தார். கரூர் அருகே உள்ள தாளப்பட்டி வள்ளுவர் அறிவியல் மேலாண்மை கல்லூரி தேர்வு மையத்துக்கு 9.15 மணிக்கு மேல் வந்தவர்கள் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்படாததால், அவர்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூரில் 3 மையங்களில் தேர்வெழுத 2,529 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 1,285 பேர் மட்டுமே எழுதினர். தேர்வு மையங்களில் ஆட்சியர் சாந்தா ஆய்வு செய்தார். நாகை மாவட்டத்தில் தேர்வெழுத 2,492 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 1,243 பேர் மட்டுமே தேர்வெழுதினர். 1,249 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை. நாகை இஜிஎஸ் பிள்ளை கல்லூரியில் ஆட்சியர் பிரவீன் பி.நாயர் ஆய்வு செய்தார்.

புதுக்கோட்டையில் 7 மையங்க ளில் 4,275 பேர் தேர்வெழுத விண் ணப்பத்திருந்தனர். இவர்களில் 2,362 பேர் தேர்வெழுதினர். 1,913 பேர் தேர்வுக்கு வரவில்லை. புதுக் கோட்டை அரசு மகளிர் கல்லூ ரியில் ஆட்சியர் பி.உமா மகேஸ் வரி ஆய்வு செய்தார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் 21 மையங்களில் தேர்வெழுத 6,196 பேர் விண்ணப்பத்திருந்தனர். இவர்களில் 3,225 பேர் தேர்வெ ழுதினர். 2,971 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x