

ஆதிதிராவிடர் மற்றும் பழங்கு டியினர் கலை இலக்கிய மேம்பாட்டு சங்கம் மூலம் ஆதிதிராவிடர், பழங்குடியினர், மதம் மாறிய கிறிஸ்துவ ஆதிதிராவிடர் என 10 நபர்கள் மற்றும் ஆதிதிராவிடர் அல்லாத ஒருவர் ஆக மொத்தம் 11 எழுத்தாளர்களின் சிறந்த படைப்புகளுக்கு உதவித் தொகை ரூ.40 ஆயிரம் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
இதற்காக, 2017-2018 -ம் ஆண்டிற்கு கடலூர் மாவட்டத்தில் இரண்டு சிறந்த எழுத்தாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
திட்டக்குடி வட்டத்தை சேர்ந்த ராஜிவ்காந்தி என்பவருக்கு ‘புதுமை புரட்சித்துறவி வள்ளலாரின் சமூகச் சீர்திருத்தங்களும் மாற்றங்களும்” என்ற படைப்பிற்கும்,.பால்ராஜ் என்பவருக்கு ‘தமிழ் சமஸ்கிருத நிகண்டியல்” என்ற படைப்பிற்கும் முதல் தவணையாக தலா ரூ.20 ஆயிரம் பரிசுத் தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி நேற்று முன்தினம் வழங்கினார். மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் (பொறுப்பு) விக்னேஸ்வரன் உடனிருந்தார்.
11 எழுத்தாளர்களின்சிறந்த படைப்புகளுக்கு உதவித் தொகை ரூ.40 ஆயிரம் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.