கோபியில் ரூ.1.27 கோடி மதிப்பில் புதிய திட்டப்பணிகள் தொடக்கம்

கோபி அருகே கொங்கர்பாளைத்தில் நடைபெற்ற விழாவில் இலவச வீட்டுமனைப் பட்டா பெறுவதற்கான ஆணையை பெண் ஒருவருக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கினார்.
கோபி அருகே கொங்கர்பாளைத்தில் நடைபெற்ற விழாவில் இலவச வீட்டுமனைப் பட்டா பெறுவதற்கான ஆணையை பெண் ஒருவருக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கினார்.
Updated on
1 min read

கோபி அருகே கொங்கர்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பழையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் ச.கவிதா தலைமை வகித்தார். தமிழக பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது:

பள்ளிக்கல்வித்துறைக்கு என ரூ.25 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, மாணவ, மாணவிகளுக்கு சீருடை, பாடப்புத்தகம், மடிக்கணினி, மிதி வண்டி, புத்தகப்பை, காலணி உள்ளிட்ட அனைத்தும் விலையில்லாமல் வழங்கப்பட்டு வருகிறது.

அரசுப் பள்ளியில் படித்த ஏழை, எளிய மாணவர்கள் மருத்துவப் படிப்பு படிப்பதற்கு உள் ஒதுக்கீடாக 7.5 சதவீதம் ஒதுக் கீட்டினை அரசு வழங்கியுள்ளது. இவர்களுக்கு மருத்துவக் கல்விக் கட்டணம் செலுத்த முடியாத நிலை உள்ளதால் ரூ.16 கோடி சுழல் நிதி ஏற்படுத்தி அந்தக் கட்டணத்தையும் அரசே செலுத்துகிறது, என்றார்.

முன்னதாக ரூ.1.27 கோடி மதிப்பில் பல்வேறு புதிய திட்டப்பணிகளுக்கு பூஜை மற்றும் 112 நபர்களுக்கு விலையில்லா வீட்டுமனை பட்டா உள்பட பல் வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத் தலைவர் கே.கே.காளியப்பன், மாவட்ட ஊராட்சித்தலைவர் கே.நவமணி, கோபி வருவாய் கோட்டாட்சியர் ஜெயராமன் உட்படபலர் கலந்து கொண்டனர்.

மக்கள் போராட்டம்

மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா தலைமையிலான அதிகாரிகள் அனைவருக்கும் இலவச வீட்டுமனைப் பட்டா கிடைக்க நடவடிக்கை எடுக்கப் படும் என உறுதியளித்தனர். இதையேற்று மக்கள் கலைந்து சென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in