பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு அவரது துறையில் நடப்பது தெரிவதில்லை கோபியில் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு  அவரது துறையில் நடப்பது தெரிவதில்லை கோபியில் மு.க.ஸ்டாலின் விமர்சனம்
Updated on
1 min read

பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக உள்ள செங்கோட்டையனுக்கு அவரது துறையில் நடப்பது கூட தெரிவதில்லை, என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

ஈரோடு மாவட்டம் கோபியை அடுத்த சிறுவலூரில், திமுக சார்பில் மக்கள் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

திமுக நடத்தும் மக்கள் கிராம சபைக் கூட்டங்களைத் தடுத்து நிறுத்த அதிமுக சதி செய்கிறது. கோவை கூட்டத்தின்போது, அமைச்சர் வேலுமணியின் தூண்டுதலின் பேரில் அதிமுக பெண் நிர்வாகி ஒருவர் ஊடுருவி குழப்பம் ஏற்படுத்த முயற்சித்தார்.

திமுக ஆட்சியில் உள்ளாட்சித் துறை நல்லாட்சித்துறையாக இருந்தது. அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித்துறை, ஊழலாட்சித் துறையாக மாறிவிட்டது.

கோபி தொகுதியில் 8-வது முறையாக எம்எல்ஏவாக வெற்றி பெற்றுள்ள செங்கோட்டையன், மூத்த அமைச்சராகவும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சராகவும் உள்ளார். ஆனால், அவரது துறையில் நடப்பது கூட அவருக்குத் தெரிவதில்லை.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் தொகுதிக்கு உட்பட்ட சிறுவலூரில் ஒரு மேல்நிலைப்பள்ளி கூட இல்லாததால், மாணவர்கள் பாதியில் படிப்பை நிறுத்தும் நிலை உள்ளது.

கடந்த 2019-ல் ஈரோடு மஞ்சளுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்ட நிலையில், அதனைப் பிரபலப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கோபியில் அனைத்து வசதியையும் கொண்ட ஒரு அரசு மருத்துவமனையைக் கூட அமைக்காத செங்கோட்டையனால் எவ்வித பயனும் இல்லை, என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in