ஈரோட்டில் ஏரிக்கரை பூங்கா பராமரிக்க தன்னார்வ நிறுவனங்களுக்கு அழைப்பு

ஈரோட்டில் ஏரிக்கரை பூங்கா பராமரிக்க  தன்னார்வ நிறுவனங்களுக்கு அழைப்பு
Updated on
1 min read

ஈரோடு வில்லரசம்பட்டி கருவில்பாறை வலசில் அமைந்துள்ள எல்லப்பாளையம் ஏரிக்கரை பூங்கா, சிறுவர்கள் விளையாடுமிடம் ஆகியவற்றைப் பராமரிக்க தன்னார்வ நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என ஈரோடு மாநகராட்சி அறிவித்துள்ளது.இதுதொடர்பாக ஈரோடு மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட வில்லரசம்பட்டி கருவில் பாறைவலசில் உள்ள எல்லப் பாளையம் ஏரியை புனரமைப்பு செய்து, அங்கே பூங்கா, சிறுவர்கள் விளையாடுமிடம் மற்றும் நடைப்பயிற்சி மேற்கொள்ள நடைபாதைகள் ஆகியவை மாநகராட்சி மூலம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பூங்காவை பொதுமக்கள் இலவசமாகப் பயன்படுத்தும் வகையில், புல்தரை, செடிகொடிகள், மரங்கள், நடைபயிற்சி பாதை, சிறுவர்கள் விளையாடும் உபகரணங்கள், மின் விளக்குகள், மின்மோட்டார்கள், கழிப்பிடங்கள் மற்றும் இதர அனைத்து விதமான பராமரிப்பு பணிகளையும் முற்றிலும் இலவசமாக நல்ல முறையில் பராமரிப்பு செய்வதற்கு தன்னார்வ நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது தொடர்பான விவரங்களை அறிய94890-93270, 94890-93232 என்ற எண்களில் தெரிந்து கொள்ளலாம், எனத் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in