பதவிக்காக ஆசைப்படுபவன் நான் இல்லை மக்களைத் தான் முதல்வராக பார்க்கிறேன் முதல்வர் பழனிசாமி பேச்சு

பதவிக்காக ஆசைப்படுபவன் நான் இல்லை மக்களைத் தான் முதல்வராக பார்க்கிறேன் முதல்வர் பழனிசாமி பேச்சு
Updated on
1 min read

நாமக்கல் அருகே முள்ளம்பட்டியில் நடைபெற்ற கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது:

தமிழகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா என இரு பெரும் தலைவர்கள் எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றியுள்ளனர். இந்திய அளவில் தமிழகம் கல்வியில் முதன்மை மாநிலமாக திகழ்கிறது. தமிழகத்தில் பல கட்சிகள் உள்ளன. குடும்பத்திற்காக உள்ள கட்சியும் உள்ளது. ஆனால், மக்களுக்காக உள்ள கட்சி அதிமுகதான். முதல்வர் பதவிக்கு ஆசைப்படுபவன் நான் இல்லை. மக்களைத் தான் முதல்வராகப் பார்க்கிறேன்.

கடந்த ஆண்டு அரசுப் பள்ளியில் பயின்ற 6 மாணவர்கள் மட்டுமே மருத்துவக்கல்வியில் சேர்ந்தனர். உள் இட ஒதுக்கீடு காரணமாக இந்தாண்டு 313 மாணவர்கள் மருத்துவக் கல்வியில் சேர்ந்துள்ளனர். அடுத்த ஆண்டு தமிழகத்தில் 11 மருத்துவக் கல்லூரிகள் செயல்பட உள்ளது. இதன்மூலம் 443 மாணவர்கள் மருத்துவம் பயில வாய்ப்பு கிடைத்துள்ளது, என்றார்.

தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி. தங்கமணி, போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், எம்எல்ஏ கே.பி.பி.பாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in