

காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரம் சானடோரியம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் மகள் ஜெயஸ்ரீ (23). இவர் சேலத்தில் உள்ள மத்திய சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பு முடித்துள்ளார். அதற்கான சான்றிதழ் பெறுவதற்காக நேற்று காரில் சேலம் சென்று கொண்டிருந்தார். அவரே காரை ஓட்டிச் சென்றார். கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் புறவழிச் சாலை பிரிதிவிமங்கலம் மேம்பாலத்தில் வந்தபோது முன்னால் சென்ற வாகனத்தை முந்த முயன்றதாக தெரிகிறது. அப்போது எதிரே வந்த மற்றொரு கார் எதிர்பாராதவிதாக ஜெயஸ்ரீ ஓட்டிவந்த கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஜெயஸ்ரீ சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
தகவலறிந்த தியாகதுருகம் போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மற்றொரு கார் ஓட்டுநர் சென்னை படாளம் பகுதியைச் சேர்ந்த கிஷோர் (27) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.