Published : 29 Dec 2020 03:15 AM
Last Updated : 29 Dec 2020 03:15 AM

சிவகங்கை வட்டார வளர்ச்சி அலுவலர் தற்கொலைக்கு முயற்சி அதிகாரிகள் தொந்தரவு செய்ததாக மனைவி புகார்

சிவகங்கையில் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற வட்டார வளர்ச்சி அலுவலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிவகங்கை செந்தமிழ்நகர் சிலம்பு தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ் (58). அவரது மனைவி தமிழ்செல்வி (54) தனியார் பள்ளி ஆசிரியராக உள்ளார். அவர்களுக்கு 2 மகள்கள் உள் ளனர்.

ரமேஷ் ஊரக வளர்ச்சி முக மைத் திட்ட அலுவலகத்தில், தேசிய வேலையுறுதித் திட்ட வட்டார வளர்ச்சி அலுவலராகப் பணிபுரிகிறார். ஓய்வு வயதை எட்டிய நிலையில், அரசின் ஓராண்டு கால பணி நீட்டிப்பு உத்தரவால், தொடர்ந்து பணி புரிந்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று காலை ரமேஷ் தனது வீட்டின் அருகே கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, சிவகங்கை அரசு மருத்து வமனையில் சேர்த்தனர்.

இதுகுறித்து சிவகங்கை டவுன் போலீஸார் விசாரித்து வருகின்றனர். அவரது மனைவி தமிழ்செல்வி போலீ ஸாரிடம் அளித்த புகாரில் கூறி யிருப்பதாவது:

உயர் அதிகாரிகள் நெருக்க டியால்தான் எனது கணவர் தற்கொலைக்கு முயன்றார். சம்பந்தப்பட்டவர்கள் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதற்கிடையில் பிடிஓ தற் கொலைக்கு முயன்ற சம்பவத்தை முறையாக விசாரித்து, சம்பந்தப்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சிவகங்கை யில் ஊரக வளர்ச்சித் துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x