

புதுக்கோட்டை மாவட்டம் அறந் தாங்கி அருகே துரையரசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வை.முத்துராஜா. இவர் தற்போது, புதுக்கோட்டை அன்னசத்திரம் பகுதியில் வசித்து வருகிறார். அரிமளம் வட்டார அரசு மருத்துவ அலுவலராக பணிபுரிந்து வந்த இவர், திமுகவில் மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளராக உள்ளார்.
இவருக்குச் சொந்தமாக புதுக்கோட்டை சந்தைப்பேட்டை பகுதியில் மருத்துவமனையும் உள்ளது. இவர் புதுக்கோட்டை தொகுதியில் போட்டியிட சீட் கேட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அரசுப் பணியை முத்துராஜா ராஜினாமா செய்துள்ளார். இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் அவர் கூறியபோது, “அரசு மருத்துவ அலுவலராக இருந்துகொண்டு கட்சிப் பணியில் முழுமையாக ஈடுபட முடியாததால் அரசு மருத்துவர் பணியை ராஜினாமா செய்துள்ளேன்.
திமுக தலைமை எனக்கு சீட் கொடுத்தால் தேர்தலில் போட்டியிடுவேன். இல்லாவிட் டால், யாருக்கு கொடுத்தாலும் அவர் வெற்றி பெற தீவிர பிரச்சாரம் செய்வேன். எனது மருத்துவமனை மூலமாக மக்களுக்கு மருத்துவ சேவை செய்வேன்” என்றார்.