இலவச பேருந்து பயண அட்டை: மாற்றுத்திறனாளிகள் மனு

இலவச பேருந்து பயண அட்டை: மாற்றுத்திறனாளிகள் மனு
Updated on
1 min read

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் அளித்த மனு விவரம் :

அரசு போக்குவரத்து கழகம் திருநெல்வேலி மண்டலம் சார்பில் கடந்த 2019 ஏப்ரல் முதல் 2020 மார்ச் வரையில் மாற்றுத் திறனாளிகளுக்கான இலவச பயண அட்டை வழங்கப்பட்டிருந்தது. கரோனா பாதிப்பால் அதை புதுப்பித்து அளிக்கவில்லை. இது தொடர்பாக அனுப்பப்பட்ட கோரிக்கைகளை அடுத்து மாற்றுத் திறனாளிகள் நல இயக்குநரின் அறிவுறுத்தலின் பேரில் டிசம்பர் 31-ம் தேதி வரையில் மாற்றுத் திறனாளிகள் இலவச பேருந்து பயண அட்டை வைத்திருப்பவர்களை பேருந்துகளில் இலவசமாக பயணிக்க அனுமதிக்க உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த உத்தரவை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து மாற்றுத் திறனாளிகள் பேருந்துகளில் இலவசமாக பயணிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இலவச பேருந்து பயண அட்டையை புதுப்பித்து வழங்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in