தமிழகத்தில் பலம் பொருந்திய இயக்கமாக பாஜக மாறி வருகிறது சிதம்பரத்தில் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

சிதம்பரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் பேட்டியளித்தார்.
சிதம்பரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் பேட்டியளித்தார்.
Updated on
1 min read

தமிழகத்தில் பலம் பொருந்திய இயக்கமாக பாஜக மாறி வரு கிறது என்று சிதம்பரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள் ளார்.

சிதம்பரத்தில் பாஜக மேற்கு மாவட்ட அணிகள் மாநாடு தனி யார் திருமணமண்டபத்தில் நேற்றுநடைபெற்றது.

இதில் கலந்து கொள்ள வந்திருந்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மோடியின் சிறப்பான ஆட்சி யாலும், பாஜக தலைவர்களின் செயல்பாட்டாலும் கல்லாக கிடந்த தமிழகம் தாமரையாக மலர ஆரம்பித்துள்ளது. தமிழகத்தில் பலம் பொருந்திய இயக்கமாக பாஜக மாறிவருகிறது. இதில் பிற கட்சியினர் வந்து சேர்கின்றனர்.

பாஜக, அதிமுக கூட்டணி நீடித்து வருகிறது. பாஜகவை வலுப்படுத்தக்கூடிய பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம்.தொண்டர்களை குஷிப்படுத்த அந்தந்த கட்சிக்கு கருத்து கூற உரிமை உண்டு, பாஜகவின் கொள்கை வேறு.அதிமுகவின் கொள்கை வேறு. 50 ஆண்டுகாலம் கிராமத்தை திரும்பிப் பார்க்காத திமுக தற்போது செல்வது பயத்தை காட்டுகிறது. 1967ல் கொடுத்த வாக்குறுதியான இரண்டு ஏக்கர் நிலம், மூன்று படி அரிசி வாக்குறுதியை , 50 ஆண்டுகள் கழித்தும் திமுகவால் நிறைவேற்ற முடியாதது வெட்கக்கேடானது.

தமிழகத்தின் முதல்வராக யார் வரவேண்டும் என கூற அந்தந்த கட்சிக்கு உரிமை உண்டு. அதேபோல அதிமுகவுக்கு அதன் முதல்வர் வேட்பாளராக யாரை அறிவிக்க வேண்டும் என உரிமை உள்ளது. மத்திய அரசின் நிதி ஒதுக்கப்பட்டு தமிழகத்தில் பல்வேறு திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in