ஜல்லிக்கட்டுப் போட்டியில் கூடுதல் காளைகளை அனுமதிக்க வலியுறுத்தல்

ஜல்லிக்கட்டுப் போட்டியில் கூடுதல் காளைகளை அனுமதிக்க வலியுறுத்தல்
Updated on
1 min read

ஜல்லிக்கட்டுப் போட்டியில் கூடு தல் காளைகள், வீரர்களை அனுமதிக்க வேண்டும் என்று ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. கரோனா காரணமாக 50 சதவீத பார்வையாளர்கள், 300 காளைகள், 300 வீரர்கள் பங்கேற்க வேண்டும் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஜல்லிக் கட்டுக்கு அனுமதி கிடைக்குமோ, இல்லையோ என்ற குழப்பத்தில் இருந்த நிலையில் அரசின் அறிவிப்பு ஜல்லிக்கட்டு ஆர் வலர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. தற்போது காளைகளுக்குப் பயிற்சி அளிப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், கூடுதல் காளைகள், வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இது குறித்து காளை உரிமை யாளர் முனியசாமி, மாடு பிடி வீரர் ராமர் ஆகியோர் கூறுகையில், அரசின் அறிவிப்பு வீரவிளை யாட்டுக்கு மரியாதை அளிப்பதாக உள்ளது. எனினும் 300 வீரர்கள், 300 காளைகள் மட்டும் பங்கேற்கச் செய்வதன் மூலம் பெயரளவில் மட்டுமே ஜல்லிக்கட்டு நடக்கும். சிறந்த பயிற்சி பெற்ற காளைகள், வீரர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ளனர். இவர்களின் பங்களிப்பு இருந்தால்தான் ஜல் லிக்கட்டில் வீரமும், எழுச்சியும் குறையாமல் இருக்கும். உள்ளூர் காளைகளுக்கு முன்னுரிமை அளித்தாலும், திறமை மிக்க பல காளைகள் களத்தில்இறங்கி விளையாட அனுமதிக்க வேண் டும்.

ஊடகங்களில் நேரடியாக ஒளிபரப்ப வாய்ப்புள்ளதால் பார்வையாளர்கள் எண் ணிக்கையை தாராளமாக கட்டுப்படுத்தலாம். அதே நேரம், கூடுதல் காளைகள், வீரர்கள் பங்கேற்க அனுமதித்தால்தான் போட்டி களைகட்டும். எப்போதும் போல் 800 மாடுபிடி வீரர்கள், 800 காளைகளை அனுமதிக்க வேண்டும் என்று கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in