Regional01
புதரில் வீசப்பட்ட ஆண் சிசு மீட்பு
ஓமலூர் அருகே புதரில் வீசப்பட்டிருந்த ஆண் சிசுவை போலீஸார் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
ஓமலூர் அடுத்த பெரியேரிப்பட்டி கொமரான்காடு பகுதியில் உள்ள புதரில் நேற்று காலை பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தையை யாரோ வீசி சென்றிருந்தனர். தகவல் அறிந்து அங்கு சென்ற தொளசம்பட்டி போலீஸார் குழந்தையை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். மேலும், குழந்தையை புதரில் வீசி சென்றது யார் என்பது தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.
