

அரியலூர் மாவட்டம் ஏலாக்கு றிச்சி அடைக்கல அன்னை ஆலயத்தில் அமைக்கப்பட்டி ருந்த கிறிஸ்துமஸ் குடிலில் இருந்து நேற்று குழந்தை அழும் சத்தம் கேட்டது. ஆலயத்தில் உள்ளோர் சென்று பார்த்தபோது, பிறந்து சில நாட்களே ஆன பெண் குழந்தை குடிலில் கிடத்தப்பட்டு இருந்தது. இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த திருமானூர் போலீஸார் குழந்தையை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று உடல்நிலை பரிசோதனை மேற்கொண்டனர். பின்னர், அடைக்கல அன்னை ஆலயத்தில் இயங்கி வரும் தத்துவள மையத்தில் ஒப்படைத்தனர்.