கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தையொட்டி மநீம நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம்

கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தையொட்டி  மநீம நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம்
Updated on
1 min read

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரப் பயணமாக இன்று திருச்சி வரவுள்ளதையொட்டி நிர் வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் திருச்சியில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்துக்கு, கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் எம். முருகானந்தம் தலைமை வகித்துப் பேசியது:

கட்சியின் தலைவர் கமல் ஹாசன் 3-ம் கட்ட தேர்தல் பிரச்சார பயணத்தை டிச.27 முதல் 30-ம் தேதி வரை மேற்கொள்ளவுள்ளார். திருச்சி ரம்யாஸ் ஹோட்டலில் தொழில் முனைவோர்களுடன் சிறப்புக் கூட்டத்தில் இன்று(டிச.27) அவர் கலந்துரையாட உள்ளார்.

தொடர்ந்து காட்டூர் சிங்கார மகாலில் கட்சி நிர்வாகிகளுடனும், திருச்சி எஸ்ஆர்எம் ஹோட்டலில் மகளிர், இளைஞர்கள் மற்றும் மாணவர் களிடையேயும் உரையாற்றுகிறார். மேலும், திரு வெறும்பூரில் உள்ள கட்சியின் 3-வது தலைமைய கத்தில் பொதுமக்களை சந்திக்கவுள்ளார். தொடர்ந்து, திருச்சியில் முக்கிய இடங் களில் அவர் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். அதன்பின், நாளை(டிச.28) தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, வேதாரண்யம் ஆகிய இடங் களிலும், டிச.29-ம் தேதி நாகப்பட்டினம், நாகூர், மயிலாடுதுறை, திருபுவனம், கும்பகோணம், கந்தர்வக்கோட்டை மற்றும் புதுக் கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலும், டிச.30-ம் தேதி திருமயம், காரைக்குடி, காளையார்கோவில், பரமக்குடி, சிவகங்கை மற்றும் அருப்புக்கோட்டையிலும் பிரச் சாரம் மேற்கொள்ள உள்ளார் என்றார்.

கூட்டத்தில், திருச்சி மண்ட லத்துக்குட்பட்ட மாவட்ட, நகர, ஒன்றிய கட்சி மற்றும் சார்பு அணிகளின் நிர்வாகிகள் பங் கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in