ஓட்டல் உரிமையாளர் மீது போக்ஸோ வழக்கு

ஓட்டல் உரிமையாளர் மீது போக்ஸோ வழக்கு
Updated on
1 min read

விருதுநகரில் சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக ஓட்டல் உரிமையாளர் ஒருவர் மீது போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

விருதுநகர் அருகே உள்ள அல்லம்பட்டியைச் சேர்ந்தவர் ஜேசுராஜ். இவர் அப்பகுதியைச் சேர்ந்த 13 வயதான 8-ம் வகுப்பு மாணவி ஒருவரை பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். இதை அறிந்த அவரது தாய், விருதுநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணையில், பாதிக்கப்பட்ட அச்சிறுமியை ஓட்டல் உரிமையாளரான ஜேசுராஜ் கடந்த 3 ஆண்டுகளாகப் பாலியல் துன்புறுத்தல் செய்து வந்தது தெரிய வந்தது.

அதையடுத்து, ஜேசுராஜ் மீது போலீஸார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in