

மதுரை மாநகர் மாவட்ட பாஜக அலுவலகத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாள் விழா நடைபெற்றது. இதில் பாஜக நகர் மாவட்டத் தலைவர் கே.கே.சீனிவாசன், வாஜ்பாய் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பாஜக பார்வையாளர் கதலி நரசிங்கப் பெருமாள் பேசுகையில், வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் பொக்ரான் அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டது. தங்க நாற்கர சாலை, கிராமச் சாலை இணைப்புத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன என்றார்.
ஊரக மற்றும் நகர்ப்புற வளர்ச்சிப் பிரிவுத் தலைவர் வாசு, செயலாளர் கார்த்திகேயன் முன்னிலையில் செல்லூரைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் பாஜகவில் இணைந்தனர்.