

சேலம் கடத்தூர் அக்ரஹாரம் பகுதியில் ரூ.96.54 கோடி மதிப்பீட்டில் சேலம் அரசு சட்டக் கல்லூரி கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதை ஆட்சியர் ராமன் ஆய்வு செய்தார்.
சேலம் கடத்தூர் அக்ரஹாரம் பகுதியில் ரூ.96.54 கோடி மதிப்பீட்டில் சேலம் அரசு சட்டக் கல்லூரி கட்டிடம், நிர்வாகக் கட்டிடம், கூட்ட அரங்கம், மகளிர் விடுதி மற்றும் நூலகம் உள்ளிட்ட கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகளை ஆட்சியர் ராமன் நேற்று ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, சங்ககிரியில் ரூ.2.54 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் சங்ககிரி வட்டாட்சியர் அலுவலக கட்டிடப் பணிகளை ஆட்சியர் ராமன் ஆய்வு செய்தார். கட்டிடப் பணிகள் அனைத்தும் தரமாகவும், துரிதமாகவும், குறிப்பிட்ட கால அளவிற்குள் விரைந்து முடித்திட வேண்டும் என பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.
ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் திவாகர், சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் அமிர்தலிங்கம், உதவி ஆட்சியர் (பயிற்சி) வீர் பிரதாப் சிங் உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனர்.சேலம் மாவட்டம் கடத்தூர் அக்ரஹாரம் பகுதியில் சேலம் அரசு சட்டக் கல்லூரி கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதனை ஆட்சியர் ராமன் நேற்று ஆய்வு மேற்கொண்டார் அருகில் மாவட்ட வருவாய் அலுவலர் திவாகர் உட்பட பலர்.