கரூர், பெரம்பலூர், அரியலூரில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

கரூர், பெரம்பலூர், அரியலூரில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
Updated on
1 min read

கரூர் புனித தெரசா, சிஎஸ்ஐ, பசுபதிபாளையம், புலியூர், வேலாயுதம் பாளையம், சின்னதாராபுரம், குளித்தலை, அரவக்குறிச்சி, தோகைமலை உள்ளிட்ட இடங்களில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட தேவாலயங்களில் கிறிஸ்துமஸை முன்னிட்டு நேற்று முன்தினம் நள்ளிரவு மற்றும் நேற்று காலை சிறப்பு திருப்பலி, பிரார்த்தனைகள் நடைபெற்றன. இவற்றில் ஏராளமான கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்து கலந்துகொண்டனர். ஒருவருக்கு ஒருவர் இனிப்புகள் வழங்கி, வாழ்த்து தெரிவித்துக்கொண்டனர்.

கரூர் சிஎஸ்ஐ தேவாலயத்தில் பாதிரியார் ஜான்பிரபாகரன் தலைமையில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற மாநில போக்குவரத்துத்துறை அமைச் சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினார்.

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள தூய பனிமய மாதா ஆலயம், பாளையம், பாடாலூர், வாலிகண்டபுரம், தொண்டமாந்துறை, அம்மாபாளையம், அன்னமங்கலம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு நேற்று காலை சிறப்பு திருப்பலி மற்றும் கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது.

அரியலூர் மாவட்டம் ஏலாக் குறிச்சியிலுள்ள புனித அடைக்கல அன்னை ஆலயம், வரதராஜன்பேட்டை தொன்போஸ்கோ தேவாலயம், பட்டிணங்குறிச்சி புனித லூர்து அன்னை ஆலயம், அரியலூர் புனித லூர்து அன்னை தேவாலயம், சிஎஸ்ஐ தேவாலயம், பெந்தகோஸ்தே சபை உள்ளிட்ட பல்வேறு தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலிகள், வழிபாடுகள் நேற்று நடைபெற்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in