

இப்பண்ணையில் பராமரிக்கப்பட்டு வந்த அரிய வகை நட்சத்திர ஆமை ஒன்று திருடப்பட்டுள்ளது தொடர்பாக, முதலைப் பண்ணை நிர்வாகம் மாமல்லபுரம் போலீஸில் புகார் அளித்துள்ளது. திருடப்பட்டுள்ள ஆமையின் சந்தை மதிப்பு ரூ.15 லட்சம் என கூறப்படுகிறது. இது தொடர்பாக, போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.