

மதுரையில் போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடும் வாகனங்களின் பதிவெண்களைத் துல்லியமாகக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க நவீன கேமராக்களின் செயல் பாட்டை காவல் ஆணையர் பிரேமானந்த் சின்கா தொடங்கி வைத்தார்.
மதுரை நகரில் தினமும் வாக னங்களைக் கண்காணிக்கவும், விதிமீறல் வாகனங்கள் மீது நட வடிக்கை எடுப்பதற்காகவும் நகர எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகள், முக்கிய சந்திப்புகள் என 15 இடங்களில் வாகனப் பதிவெண்களைத் தானாகப் பதிவு செய்யும் 22 அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதில் வாகனங்களை முழுத் தோற்றத்துடன் படமெடுத்து குறிப்பிட்ட சில மாதங்கள் வரை பாதுகாக்கும் வசதி உள்ளது.
மதுரை தெப்பக்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள நவீன கேம ராவின் செயல்பாட்டை மாநகர காவல் ஆணையர் பிரேமானந்த் சின்கா நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:
இந்த கேமராக்கள் மூலம் சந்தேக வாகனங்களைக் கண் காணிக்கலாம். வாகனங்கள் மூலம் குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை துரிதமாகப் பிடிக்க முடியும். சட்டம்-ஒழுங்குப் பிரச்சினை, விபத்துகளை ஏற்படுத்திவிட்டு தப்பும் வாகனங்களை உடன டியாகக் கண்டறியலாம். சோத னைச் சாவடிகளில் நடக்கும் போக்குவரத்து விதிமீறல்களைக் கண்டறிவதுடன், போலி பதிவெண் வாகனங்களையும் பிடிக்கலாம்.
தற்போது பிடிஆர், ஏவி மேம்பாலம், யானைக்கல் மேம்பாலம் ஆகிய இடங்களில் இக்கேமராக்கள் பொருத்தப் பட்டுள்ளன. சாதாரண சிசிடிவி கேமராக்களில் குற்றச் செயல், விதி மீறலில் ஈடுபடுவோரை முழுமையாகக் கண்டறிய முடியாததால் இந்த நவீன கேமராக்கள் பொருத்தப் பட்டுள்ளன.
அடுத்த கட்டமாக ஹெல்மெட் அணியாமல் செல்வோர் உள் ளிட்ட போக்குவரத்து விதி மீறும் வாகனங்களுக்குத் தானாக அபராதம் விதிக்கும் திட்டமும் அமல்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் துணை காவல் ஆணையர்கள் பழனிக்குமார், சிவபிரசாத், பாஸ்கரன், சுகு மாறன், போக்குவரத்து உதவி ஆணையர்கள் மாரியப்பன், திருமலைக்குமார் உள்ளிட்ட போக்குவரத்துப் பிரிவு காவல் துறையினர் பங்கேற்றனர்.