தென்காசிக்கு 3,260 வாக்குப்பதிவு இயந்திரங்கள் வருகை

தென்காசி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மாவட்ட ஆட்சியர் சமீரன் பார்வையிட்டார்.
தென்காசி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மாவட்ட ஆட்சியர் சமீரன் பார்வையிட்டார்.
Updated on
1 min read

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.

தேர்தலுக்காக மகாராஷ் டிரா மாநிலத்தில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங் கள் 5 லாரிகளில் பலத்த பாதுகாப்புடன் கொண்டுவரப் பட்டு, தென்காசி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வைக்கப்பட்டன.

தென்காசி மாவட்ட ஆட்சியர் சமீரன் கூறும்போது, “3,260 வாக்குப் பதிவு இயந்திரங்கள், 2,490 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 2,680 வாக்குபதிவு சரிபார்ப்பு இயந்திரங்கள் ஆகியவை, மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து கொண்டுவரப்பட்டு, அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. பெல் பொறியாளர்களால் இவை சரிபார்க்கப்படும்” என்றார்.

கோட்டாட்சியர் (பொறுப்பு) சரவணக்கண்ணன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மரக தநாதன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் குணசேகரன், தேர்தல் வட்டாட்சியர் அமிர்தராஜ், தென்காசி வட்டாட்சியர் சுப்பையன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in