Published : 24 Dec 2020 07:22 AM
Last Updated : 24 Dec 2020 07:22 AM

பாரதியார் பல்கலைக்கழகத்தில் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு ரூ.3,000 உதவித்தொகையுடன் இலவச பயிற்சி

பாரதியார் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில், சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு வரும் 2021-ம் ஆண்டு ஜூன் 27-ம் தேதி நாடு முழுவதும் நடைபெற உள்ளது. இதற்கான முழு நேர இலவசப் பயிற்சி முகாம் பாரதியார் பல்கலைக்கழகத்தில் வரும் பிப். 15-ம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. வரும் ஜன. 30-ம் தேதி நடத்தப்படும் நுழைவுத்தேர்வு அடிப்படையில் மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அன்று காலை 11 மணி முதல் மதியம் ஒரு மணி வரை நுழைவுத்தேர்வு நடைபெறும்.

நுழைவுத்தேர்வுக்கான விண்ணப்பம் www.b-u.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் அதைபதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, கல்வி, ஜாதிச் சான்றிதழ்கள், ரூ. 5 அஞ்சல்தலை ஒட்டப்பட்டு, சுய முகவரி எழுதப்பட்ட அஞ்சல் உரை ஆகியவற்றை இணைத்து, `ஒருங்கிணைப்பாளர் மற்றும் பயிற்சி இயக்குநர், அண்ணா நூற்றாண்டு நினைவு குடிமைப்பணியியல் பயிற்சி மையம், நாச்சிமுத்து அரங்கம், பாரதியார் பல்கலைக்கழகம், கோவை-46' என்ற முகவரிக்கு வரும் ஜன. 5-ம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படுவோருக்கு மாதம் ரூ.3,000 உதவித்தொகை, பயிற்சி, தங்குமிடம் இலவசமாக வழங்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x