காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் சத்துணவு ஊழியர்கள் கவன ஈர்ப்புப் பெருந்திரள் முறையீடு போராட்டத்தை நடத்தினர்.
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடந்த போராட்டத்துக்கு மாவட்டத் தலைவர் செல்வகுருசாமி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் சோலையன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். நிர்வாகிகள் பாண்டிச்செல்வி, மணி உள் ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண் டும், குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850-ம், குடும்ப ஓய்வூதியமும் வழங்க வேண்டும், பணிக்கொடை தொகையை உயர்த்தி வழங்க வேண்டும், காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தினர்.
ராமநாதபுரம்
கோரிக்கைகளை விளக்கி அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் சண்முகநாததுரை, சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் முருகேசன் ஆகியோர் பேசினர்.
விருதுநகர்
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலர் லட்சுமிநாராயணன் உட்பட பல் வேறு சங்க நிர்வாகிகள் வாழ்த் துரையாற்றினார்.
பொது சுகாதாரத்துறை அலு வலர் சங்க மாநிலச் செயலர் கண்ணன் சிறப்புரையாற்றினார். சத்துணவு ஊழியர் சங்க மாநிலச் செயலர் அய்யம்மாள் நிறைவுரையாற்றினார்.
திண்டுக்கல்
