விவசாய சங்கங்களின் கூட்டியக்கம் உண்ணாவிரதம்

திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகே நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டியக்கத்தினர்.படம்: ஜி.ஞானவேல்முருகன்
திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகே நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டியக்கத்தினர்.படம்: ஜி.ஞானவேல்முருகன்
Updated on
1 min read

வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகே தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டியக்கம் சார்பில் நேற்று உண்ணாவிரதம் நடைபெற்றது.

கூட்டியக்கத்தின் மாநிலத் தலைவர் தனபாலன் தலைமை வகித்து பேசும்போது, “வேளாண் சட்டங்களுக்கு எதிராக அடுத்தக் கட்ட போராட்டம் நடத்துவது குறித்து, டிச.30-ம் தேதி திருவண் ணாமலையில் அனைத்து விவ சாய கூட்டமைப்பின் தலைவர் கள் ஆலோசனை கூட்டம் நடை பெறும்’’ என்றார்.

விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு பேசும்போது, “விவசாயிகளுக்கு லாபகரமான விலை கொடுக்காமல், மக்களுக்கு எவ்வளவு ரூபாய் கொடுத்தாலும் அதற்கான விளைவுகளை அதிமுக தேர்தலில் சந்திக்க நேரிடும்” என்றார்.

தலைவர் செல்லமுத்து பேசும் போது, “மத்திய அரசு ஈகோ பார்க்காமல் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்’’ என்றார்.

கள்ளக்குறிச்சி கோபாலகிருஷ் ணன் பேசும்போது, “வேளாண் சட்டங்களை திரும்ப பெறாவிட் டால் தேசிய நெடுஞ்சாலையை முற்றுகையிடுவோம்” என்றார்.

இப்போராட்டத்தில் 400-க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in