

பெரம்பலூர் வெங்கடேசபுரம் பகுதியில் உள்ள பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் நேற்று சிபிஐ மற்றும் வங்கி அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
சிபிஐ இன்ஸ்பெக்டர் மதுசூதனன் தலைமையில் சிபிஐ போலீஸ்காரர் ஒருவர் மற்றும் 2 வங்கி அதிகாரிகள் என 4 பேர் கொண்ட குழுவினர் நேற்று காலை 10.30 மணியளவில் பெரம்பலூர் வெங்கடேசபுரம் பாங்க் ஆஃப் பரோடா வங்கிக்குள் சென்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
வங்கி மேலாளர் சத்தியராஜ் மற்றும் வங்கி ஊழியர்களிடம் வங்கி மூலம் கொடுக்கப்பட்டுள்ள நகைக் கடன் குறித்து விசாரித்தனர். மேலும், வங்கியில் கொடுக் கப்பட்ட நகைக் கடனுக்காக அடமானமாக பெறப்பட்ட நகைகள் இருப்பு சரியாக உள்ளதா என ஆய்வு செய்தனர். இந்த சோதனை நேற்று இரவு வரை நடைபெற்றது.
இந்த சோதனையால் வங்கி சேவை பாதிக்கப்ப டவில்லை.
மதுரை மண்டலத்தில் உள்ள பாங்க் ஆஃப் பரோடா வங்கிகளில் பெரம்பலூர் வங்கியில் தான் அதிகளவில் நகைக் கடன் கொடுக்கப்பட்டதாகவும், இதில் முறைகேடு ஏதேனும் நடந்துள்ளதா என சிபிஐ உதவியுடன் வங்கி உயர் அதிகாரிகள் சரிபார்த் ததாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து வங்கி மேலாளர் சத்தியராஜிடம் கேட்ட போது, “இது வழக் கமான ஆய்வுதான். இதுகு றித்து நான் வேறு எதுவும் சொல்லக் கூடாது” என்றார்.