

அமெரிக்க லாட்டரியில் 13 லட்சம் டாலர்கள் பரிசு விழுந் ததாகக் கூறி, திருமங்கலத்தைச் சேர்ந்த பெண்ணிடம் ரூ.27.23 லட்சம் முறைகேடு செய்தது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
திருமங்கலம் காட்டு மாரி யம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பிரகலாதன். இவரது மனைவி சுப்புலட்சுமி(45). இவரது முகநூல் பக்கத்துக்கு, கடந்த ஆண்டு ஜூலை 21-ல் ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் ‘ராக் ஜான்சன் லாட்டரி’ நிறுவன மேலாளர் சாம்லால் என்பவர் சுப்புலட்சுமிக்கு அமெரிக்க லாட் டரியில் 13 லட்சம் டாலர்கள் பரிசு கிடைத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார். மேலாளர் சாம்லால் சுப்புலட்சுமியின் வங்கிக் கணக்கு விவ ரங்களைக் கேட்டுப் பெற்றுள்ளார். மேலும் அமெரிக்க டாலர்களை இந்தியப் பணமாக மாற்ற ஒரு சதவீதம் சேவைக் கட்டணம் செலுத்த வேண்டும் எனக் கூறி ரூ.27,23,383 அனுப்புமாறு கேட்டுள்ளார். இதை நம்பிய சுப்புலட்சுமி வெவ்வேறு வங்கிக் கணக்குகளில் அவர் குறிப்பிட்ட தொகையை அனுப் பினார். ஆனால், 13 லட்சம் டாலர்களைத் தரவில்லை. இந்த நூதன முறைகேடு குறித்து மாவட்டக் குற்றப் பிரிவில் சுப்பு லட்சுமி புகார் செய்தார்.
அதன்பேரில், நிறுவன மேலா ளர் சாம்லால் மீது காவல் ஆய் வாளர் சுதந்திராதேவி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.