

வேளாண் சட்டத்தை மத்திய அரசு வாபஸ் பெறக்கோரி திண்டுக்கல் மாவட்ட, மாநகர் காங்கிரஸ் சார்பில் ஏர் கலப்பை பேரணி நேற்று மாலை காமராஜர் சிலையில் இருந்து தொடங்கியது. மாநகர் காங்கிரஸ் தலைவர் சொக்கலிங்கம் தலைமை வகித்தார் மாநில மகளிர் காங். தலைவர் சுதா, மாவட்ட இளைஞர் அணித் தலைவர் மணிகண்டன் உட்பட பலர் கலந்துகொண்டனர். அப்போது பேரணிக்கு போலீஸார் அனுமதி மறுத்தனர். இதைக் கண்டித்து காங்கிரஸார் சாலை மறியல் செய்தனர். இதையடுத்து 140 பேரைக் கைதுசெய்தனர்.