மதுரை அருகேயுள்ள குல மங்கலம் நியாயவிலைக் கடையில் பொருட்கள் வழங்காததைக் கண்டித்துக் கிராமத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள் சர்வர் பிரச்சினை காரணமாக தாம தமாவதாகவும், விரைந்து பொருட்கள் வழங்குவதாகவும் உறுதி அளித்தனர். இதையடுத்து மக்கள் மறியலைக் கைவிட்டனர்.