கூடல் கலைக்கூடம் விழாவில் குறும் படம் வெளியீடு

விழாவில் கவிதை நூல் வெளியிட்ட பேராசிரியர்கள் அழகுபாரதி, ஆனந்தகுமார், உடன் நூலாசிரியர்  கூடற்பாணன் உள்ளிட்டோர்.
விழாவில் கவிதை நூல் வெளியிட்ட பேராசிரியர்கள் அழகுபாரதி, ஆனந்தகுமார், உடன் நூலாசிரியர் கூடற்பாணன் உள்ளிட்டோர்.
Updated on
1 min read

மதுரையில் சுகாதாரம், சுற்றுச்சூழல் உட்பட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தும் கூடல் கலைக்கூடம் சார்பில் 21-ம் ஆண்டு விழா, ‘தொன உசுரு’ என்ற குறும்படம், கவிதை நூல் வெளியீட்டு விழா நடந்தது.

கலைக்கூடம் சின்னத்தை பாரதிதேவி திறந்து வைத்தார். பேராசிரியர்கள் தவசி ஞானசேகர், சாகுல் அமீது, எழுத்தாளர் வேணு கோபால் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். கூடற்பாணன் எழுதிய ‘வெப்பம் உறையும் நிலம்’ எனும் கவிதை நூலை பேராசிரியர் பா.ஆனந்தகுமார் வெளியிட, பேராசிரியர் ரா.ஆனந்தகுமார் பெற்றுக் கொண்டார். கணேச மூர்த்தியின் ஓவியங்களைப் பேராசிரியர் தமிழ்குமரன் திறந்து வைத்தார். நாடக இயக்குநரும் நடிகருமான ஹலோ கந்தசாமி பாராட்டிப் பேசினார்.

தொடர்ந்து விழாவில் கூடல் கலைக்கூட நிர்வாகி பேராசிரியர் அழகுபாரதி எழுதி, இயக்கிய கைலாசமூர்த்தி நடித்த ‘தொன உசுரு’ குறும்படம் வெளியிடப்பட்டது. பேராசிரியர்கள் கரு.முருகேசன், பெரியசாமி ராசா, முத்தையா, நடிகர் பருத்தி வீரன் தங்கவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கரகாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடந்தன. சோகோ அறக்கட்டளை தொடர்பு மைய இயக்குநர் பிரான்சிஸ் நிகழ்ச்சியை ஒருங் கிணைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in