சமையல் காஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து திமுக மகளிரணியினர் ஆர்ப்பாட்டம்

காஸ் சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட திமுக மகளிரணி சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர்.படம்: ஜி.ஞானவேல்முருகன்
காஸ் சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட திமுக மகளிரணி சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர்.படம்: ஜி.ஞானவேல்முருகன்
Updated on
1 min read

சமையல் காஸ் சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து திருச்சி மத்திய மண்டலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் திமுக மகளிரணி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருச்சி தெற்கு மாவட்ட திமுக மகளிரணி சார்பில் சிந்தாமணி அண்ணாசிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தெற்கு மாவட்ட மகளிரணி செயலாளர் லீலா வேலு தலைமை வகித்தார். கவிஞர் சல்மா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்எல்ஏ கண்டன உரையாற்றினார்.

திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வடக்கு மாவட்டச் செயலாளர் காடுவெட்டி ந.தியாக ராஜன், மத்திய மாவட்ட பொறுப் பாளர் க.வைரமணி, துறையூர் எம்எல்ஏ ஸ்டாலின்குமார், மகளிரணி நிர்வாகி விஜயா ஜெயராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதேபோல, அரியலூரில் மாவட்ட மகளிரணி அமைப்பாளர் விஜயலட்சுமி, மாவட்டச் செயலாளர் சிவசங்கர், பெரம்பலூரில் மாவட்ட மகளிரணி அமைப்பாளர் மகாதேவி, மாவட்டச் செயலாளர் சி.ராஜேந்திரன், புதுக்கோட்டையில் மாவட்ட மகளிரணி அமைப்பாளர் கமலா, வடக்கு மாவட்ட பொறுப் பாளர் கே.கே.செல்லபாண்டியன், கரூரில் மாவட்ட மகளிரணி அமைப்பாளர் கலாவதி, மாவட்ட பொறுப்பாளர் வி.செந்தில்பாலாஜி எம்எல்ஏ, விவசாய அணி செயலாளர் ம.சின்னசாமி, நெசவாளர் அணி தலைவர் நன்னியூர் ராஜேந்திரன், எம்எல்ஏ ராமர், தஞ்சாவூரில் மாநில மகளிரணி அமைப்பாளர் காரல்மார்க்ஸ், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் அசோக்ராணி, கும்பகோணத்தில் புவனேஸ்வரி கல்யாணசுந்தரம், திருவாரூரில் மாவட்டச் செயலாளர் பூண்டி கலைவாணன் எம்எல்ஏ, மாவட்ட துணைச் செயலாளர் கலைவாணி, நாகையில் மாவட்ட மகளிரணி அமைப்பாளர் செல்வ ராணி, தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கவுத மன், காரைக்காலில் எம்எல்ஏ கீதா ஆனந் தன். திமுக அமைப் பாளரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எம்.எச்.நாஜிம், மாநில மகளிரணி அமைப்பாளர் வைஜெயந்திராஜன் உட்பட ஏராள மானோர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in