ஓய்வூதியத்தை விரைந்து வழங்ககூட்டுறவு பணியாளர்கள் வலியுறுத்தல்

தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி  ஓய்வு பெற்ற பணியாளர்கள் நலச்சங்கத்தின் (டாக்பியா) கூட்டத்தில் பேசினார் சங்கத்தின்  மாவட்டச் செயலாளர் ஆ.ம.ஆசிரியதேவன்.
தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி ஓய்வு பெற்ற பணியாளர்கள் நலச்சங்கத்தின் (டாக்பியா) கூட்டத்தில் பேசினார் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆ.ம.ஆசிரியதேவன்.
Updated on
1 min read

தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி ஓய்வு பெற்ற பணியாளர் நலச்சங்கத்தின் (டாக்பியா) மதுரை மாவட்டச் செயற்குழுக் கூட்டம் மதுரை அருகே ஒத்தக்கடையில் நடைபெற்றது.

மாவட்டத் தலைவர் இரா. திருச்சிற்றம்பலம் தலைமை வகித்தார். டாக்பியா மதுரை மாவட்டச் செயலாளர் ஆ.ம. ஆசிரியதேவன் முன்னிலை வகித்தார். இதில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் நகர கூட்டுறவு கடன் சங்கங்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற பணியாளர்கள் அனைவருக்கும் விரைவில் ஓய்வூதியம் வழங்க தமிழக முதல்வர், கூட்டுறவுத்துறை அமைச்சர் ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in