மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து ஈரோட்டுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வருகை

சட்டப்பேரவைத் தேர்தலுக்காக மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நேற்று ஈரோடு வந்தன.
சட்டப்பேரவைத் தேர்தலுக்காக மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நேற்று ஈரோடு வந்தன.
Updated on
1 min read

மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து ஈரோடு வந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஈரோடு மாநகராட்சி ரயில்வே காலனி மேல்நிலைப்பள்ளியில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதால், அதற்கான முன்னேற்பாட்டுப் பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கி யுள்ளது. சட்டப்பேரவைத் தேர்த லுக்கு இருப்பில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுடன், கூடுதல் எண்ணிக்கையிலான வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவைப்படுகின்றன.

இதற்காக, வெளிமாநிலங்களில் இருந்து, மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் மூலம், பாதுகாப்பாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங் களை கொண்டுவரும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்படி, ஈரோடு மாவட்டத்திற்கு மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து 2 லாரிகள் மூலம் 1600 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 2810 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 3720 விவிபேட் இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டன.

இவை ஈரோடு மாநகராட்சி ரயில்வே காலணி மேல்நிலைப் பள்ளியில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடத்தை அனைத்துக் கட்சி பிர முகர்கள் முன்னிலையில், மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.கவிதா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in