திருவண்ணாமலையில் வீடுகளை இழந்தவர்களுக்கு நிவாரண உதவியை வழங்கிய முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு.
திருவண்ணாமலையில் வீடுகளை இழந்தவர்களுக்கு நிவாரண உதவியை வழங்கிய முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு.

தி.மலையில் மழையால் வீடுகளை இழந்த 4 குடும்பங்களுக்கு திமுக நிவாரண உதவி முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்

Published on

திருவண்ணாமலையில் மழை யால் வீடுகளை இழந்த 4 குடும் பங்களுக்கு திமுக சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப் பட்டன.

தி.மலை நகரம் வேல் நகரில் வசிப்பவர் கண்ணம்மாள் துரை, ராதா பூங்காவனம், சாந்தி முத்து, கீழ்நாத்தூர் பகுதியில் வசிப்பவர் எத்திராஜ். இவர்களது வீடுகள், சமீபத்தில் பெய்த கனமழைக்கு சேதமடைந்தன. இதையடுத்து, அவர்கள் குடும்பங்களுக்கு திமுக சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன. திருவண்ணாமலை நகரில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில், 4 குடும்பங்களுக்கு தலா ரூ.5 ஆயிரம், வேட்டி, சேலை மற்றும் அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை முன்னாள் அமைச்சரும் மாவட்ட திமுக செயலாளருமான எ.வ.வேலு எம்எல்ஏ வழங்கி ஆறுதல் கூறினார். அப்போது, தலைமை செயற்குழு உறுப்பினர் தரன் உட்பட பலர் உடனிருந்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in