போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு அஞ்சலி

டெல்லி போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கெடிலத்தில் நடைபெற்ற மவுன ஊர்வலம்.
டெல்லி போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கெடிலத்தில் நடைபெற்ற மவுன ஊர்வலம்.
Updated on
1 min read

வேளாண் திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி பஞ்சாப், ஹரியாணா, உத்தரப்பிரதேச விவசாயிகள் டெல்லியில் போராடி வரும் நிலையில், கடும் குளிர் காரணமாக சிலர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களுக்கு கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்ட மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி சார்பில் அஞ்சலி செலுத்தவும், மார்க்சிஸ்ட் லெனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த வினோத்மிஸ்ரா நினைவு நாள் அனுசரிப்பு நிகழ்வும் கள்ளக்குறிச்சி மாவட்டம் கெடிலத்தில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மத்திய கமிட்டி உறுப்பினர் பாலசுந்தரம் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார். முன்னதாக தொகுதி செயலாளர் கலியமூர்த்தி தலைமையில் மவுன ஊர்வலம் நடைபெற்றது.

டெல்லியில் போராடி வரும் நிலையில், கடும் குளிர் காரணமாக சிலர் உயிரிழந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in