பணியின்போது உயிரிழந்த 2 எஸ்.ஐ.கள் குடும்பத்தினருக்கு தலா ரூ. 4 லட்சம்

பணியின்போது உயிரிழந்த  2 எஸ்.ஐ.கள்  குடும்பத்தினருக்கு தலா ரூ. 4 லட்சம்
Updated on
1 min read

தமிழ்நாடு காவல் துறையில் 1993-ம் ஆண்டு பணியில் சேர்ந்த காவலர்கள் 25 ஆண்டுகளுக்குப் பிறகு பதவி உயர்வு பெற்று தற்போது அந்தந்த மாவட்டத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளர்களாகப் பணிபுரிகின்றனர். இவர்களில் 6 சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் பல்வேறு காரணங்களால் உயிரிழந்தனர். இவர்களது குடும்பத்தினருக்கு உதவும் வகையில் 1993-ல் பணியில் சேர்ந்த காவலர்களின் காக்கும் கரங்கள் சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் இணைந்து திரட்டிய நிதியில் மதுரை மாவட்டம் மேலூரில் பணிபுரிந்த டி.பரமேஸ்வரன் (இறப்பு 21. 8. 2020), சமயநல்லூரில் நெடுஞ்சாலை ரோந்துப் பிரிவில் பணிபுரிந்த எம்.நாகராஜன் (இறப்பு 26 .10. 2020) ஆகிய இருவரின் குடும்பத்தினருக்கும் மதுரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் முன்னிலையில் தலா ரூ.4 லட்சம் வீதம் வழங்கினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in