

புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் திருப்பரங்குன்றத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயராமன், மாநில தகவல் அறியும் அணியின் இணைச் செயலாளர் சத்தியன் சிவன், துணைத் தலைவர் திருநாகேஸ்வரன், ஓபிசி அணியின் மாவட்ட தலைவர் நவீன்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.