

புருனை நாட்டில் கரோனாவால் வேலையிழந்து பக்கவாதம் பாதித்து சிகிச்சைக்கு வழியின்றி தவித்த சிவகங்கை இளைஞர், தமிழக கட்டிடத் தொழிலாளர்கள் சங்கத்தின் முயற்சியால் சொந்த ஊர் திரும்பினார்.
சிவகங்கை மாவட்டம் கன்னமங்கலத்தைச் சேர்ந்த சுந்தர்ராஜ் (38), புருனை நாட்டுக்குக் கட்டுமான வேலைக்குச் சென்றார். ஓட்டுநர் வேலையும் தெரிந்திருந்ததால் அதே நிறுவனத்தில் ஓட்டுநராகப் பணியமர்த்த ப்பட்டார்.
இந்நிலையில், கனோனா தாக்கத்தால் சுந்தர்ராஜ் வேலையிழந்தார். அன்றாட வாழ்க்கையை ஓட்ட வழியின்றி தவி த்தார்.
திடீரென்று அவருக்குப் பக்கவாத நோய் ஏற்பட்டது. கரோனா காலம் என்பதால் அங்கு சிகிச்சை பெற முடி யவில்லை. இவர் பணிபுரிந்த நிறுவனமும் உதவவில்லை.
சொந்த ஊர் திரும்பவும், சிகிச்சைக்குப் பணமும் இன்றியும் சுந்தர்ராஜ் தவித்தார். அவரை ஊருக்கு அழைத்து வர உதவ வேண்டும் என குடும்பத்தினர் தமிழக கட்டிடத் தொழிலாளர்கள் மத்திய சங்க மதுரை தெற்கு மாவட்டத் தலைவர் வெங்கடேசனிடம் வேண்டுகோள் விடுத் தனர். இது குறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் பொன்குமாரிடம் தெரிவித்ததன் பேரில், இந்திய தூதரகம் மற்றும் சர்வதேச தொழிற்சங்க நிர்வாகிகளிடம் பொன்குமார் முயற்சி மேற்கொண்டார்.
இதையடுத்து, புருனை நாட்டின் இந்திய தூதரகம், சுந்தரராஜை சொந்த ஊருக்கு அனுப்ப ஏற்பாடு செய்தது.
நேற்று புருனை நாட்டில் இருந்து கோவை வந்த அவர், அங்கிருந்து கார் மூலம் மதுரை வழியாக சிவகங்கை அழைத்து வரப்பட்டார்.
இளைஞரை மீட்க உதவிய தமிழக கட்டிடத் தொழிலாளர்கள் சங்க நிர்வா கிகளுக்கு அவரது குடும் பத்தினர் நன்றி தெரிவித்தனர்.