

மதுரை மாட்டுத்தாவணி பஸ்நி லையம் பகுதியிலிருந்து ஒத்தக் கடை வரை உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது.
மதுரையில் போக்குவரத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த சாலை யாக மதுரை-மேலூர் சாலையும், ரிங்ரோடும் உள்ளது. இந்த சாலைகள் வழியாகதான், மதுரை-சென்னை சாலை, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் மாவட் டங்களை இணைக்கும் ‘ரிங்’ ரோடு, சிவகங்கை மாவட்டத்தை இணைக்கும் திருவாதவூர் சாலை, நத்தம் சாலை மற்றும் அழகர்கோவில் சாலயை இணைக் கும் நரசிங்கம்-ஒத்தக்கடை ரோடு போன்ற சாலைகள் இணைகின்றன.
மாட்டுத்தாவணி ஒருங்கி ணைந்த பஸ்நிலையம், உயர் நீதிமன்ற மதுரை கிளை, வேளாண் கல்லூரி போன்றவையும் இதே சாலையில்தான் அமைந் துள்ளன.
இந்த சாலையில் மாட்டுத் தாவணி முதல் ஒத்தக்கடை வரை உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக உள்ளது. ஆனால், அதற்கான நடவடிக்கை எடுக்கப்படாததால் மாட்டுத்தாவணி பஸ்நிலையம் முன்பும், ஒத்தக்கடை சந்திப்பு பகுதியிலும் காலை முதல் இரவு வரை போக்குவரத்து நெரிசல் உள்ளது.
தற்போது நத்தம் சாலையில் அமைக்கப்படுவது போன்று, இந்த சாலையிலும் உயர்மட்ட மேம்பாலம் அமைத்தால் மட்டுமே மாட்டுத்தாவணி பஸ்நிலையம் பகுதியில் நீடிக்கும் போக்குவரத்து நெரிசல் குறைய வாய்ப்புள்ளது.
இந்த உயர்மட்ட மேம்பாலம் அமைந்தால், மாட்டுத்தாவணி பஸ்நிலையம் வராமல் மேலூர் சாலைக்கும், ரிங்ரோட்டுக்கும் செல்லும் வாகன ஓட்டுநர்களும், பெரியார் பஸ்நிலையம், கே.கே.நகர் செல்லும் வாகன ஓட்டுநர் களும் பயனடைவர்.
எனவே, மாட்டுத்தாவணி பஸ்நி லையம் அருகே பூ மார்க்கெட் பகுதியிலிருந்து ஒத்தக்கடை வரை உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.