

மதுரை ஜெய்ஹிந்த்புரம் பாரதியார் சாலையைச் சேர்ந் தவர் தியாகராஜன்(26). பி.இ. பட்டதாரி. தனியார் நிறுவன ஊழியர்.
இவரை 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருமங் கலத்தைச் சேர்ந்த சத்யா(35), சங்கரபாண்டியன் (55) ஆகி யோர் அணுகினர். இவர்கள் தியாகராஜனுக்கு ‘பேங்க் ஆப் இந்தியா’வில் வேலை வாங்கித் தருவதாகக் கூறினர்.
இதற்காக அவரிடம் தனியார் வங்கி மூலம் ரூ.3.10 லட்சம் பெற்றனர். ஆனால், வங்கி வேலைக்கு அவர்கள் ஏற்பாடு செய்யவில்லை. பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றினர். இது தொடர்பாக தியாகராஜன் திருமங்கலம் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
நீதிமன்ற உத்தரவின்பேரில் சத்யா, சங்கரபாண்டியன் ஆகியோர் மீது திருமங்கலம் நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவர்களைத் தேடி வருகின்றனர்.