

ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள கல்யாணிபுரத்தைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரது மகன் சுடலைமணி(27). இவர், பாவூர்சத்திரத்தில் உள்ள இறைச்சிக் கடையில் வேலை பார்த்து வந்தார். கருத்து வேறுபாடு காரணமாக மனைவி பிரிந்து சென்றதால், வெய்க்காலிப்பட்டியில் உள்ள தனது சகோதரி வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்குமுன்பு ஆவுடையானூர் அருகே சுடலை மணி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
பாவூர்சத்திரம் போலீஸார் விசாரணை நடத்தினர். இதில், மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் சுடலைமணி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. ஆவுடையானூரைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரது மகன் சுலைமான் (24) என்பவரை போலீஸார் கைது செய்தனர்.