

தென்காசியில் தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டம் வட்டத் தலைவர் முருகேசன் தலைமையில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் பரமசிவன் முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் கருணாலய பாண்டியன் வரவேற்று பேசினார். செயல் தலைவர் சண்முக சுந்தரபாண்டியன், மாவட்ட பொருளாளர் நாராயணன், மாநில ஒருங்கிணைப்பாளர் மோகன்ராஜ், கோட்ட தலைவர் அருணாசலம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், “8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 10 ஆண்டுகள் பணி முடித்துள்ள கிராம உதவியாளர்களுக்கு அலுவலக உதவியாளர் பணியிடத்தில் 10 சதவீதம் ஒதுக்கீடு வழங்க வேண்டும். 10 ஆண்டுகள் பணி நிறைவு செய்து, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற கிராம உதவியாளர்களுக்கு கிராம நிர்வாக அலுவலர் பணியிடத்தில் 20 சதவீதம் ஒதுக்கீடு வழங்க வேண்டும். தென்காசி மாவட்டத்தில் காலியாக உள்ள 51 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்” உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.