வேலூர், ராணிப்பேட்டையில் முடித்திருத்தும் தொழிலாளர் நல சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு மருத்துவ சமூக நலச்சங்கம் மற்றும் முடித்திருத்தும் தொழிலாளர் நலச்சங்கத்தினர். படம்:வி.எம்.மணிநாதன்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு மருத்துவ சமூக நலச்சங்கம் மற்றும் முடித்திருத்தும் தொழிலாளர் நலச்சங்கத்தினர். படம்:வி.எம்.மணிநாதன்.
Updated on
1 min read

விருதுநகர் மாவட்டத்தில் முடி திருத்தும் குடும்பத்தினரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முடித்திருத்தும் தொழிலாளர் நலச்சங்கத்தினர் நேற்று ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழிவட்டத்துக்கு உட்பட்ட உலக்குடி கிராமத்தில் வசிக்கும் ராஜா என்பவர், ஆதிதிராவிடர்களுக்கு முடி திருத்தும் பணியை செய்துள் ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜாவின் குடும்பத்தினர் அனை வரையும் கிராமத்தை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர். கடந்த 3 மாதங்களாக அவர்கள் வனப்பகுதியில் வசித்து வரும் நிலை யில் ஊரை விட்டு ஒதுக்கி வைத்தவர்கள் மீது புகார் அளித்தும், உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை கண்டித்து தமிழகம் முழுவதும் முடி திருத்தும் தொழிலாளர்கள் நலச் சங்கம் மற்றும் தமிழ்நாடு மருத்துவ சமூக நலச்சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

அதன்படி, வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர்கணபதி தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் மூர்த்தி, மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் விஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முடி திருத்துவோர் சங்கத் துக்கு ஆதரவு தெரிவித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் நீலசந்திரகுமார், தொகுதி செயலாளர் விஜய சாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ராணிப்பேட்டை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in