திருவண்ணாமலை மாவட்டத்தில் கலப்பட உரங்கள் விற்பனையை தடுக்க வேண்டும் குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை

தி.மலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று காணொலி காட்சி மூலம் நடை பெற்ற விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் பேசும் ஆட்சியர் சந்தீப் நந்தூரி.
தி.மலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று காணொலி காட்சி மூலம் நடை பெற்ற விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் பேசும் ஆட்சியர் சந்தீப் நந்தூரி.
Updated on
1 min read

திருவண்ணாமலை மாவட்டத்தில் கலப்பட உரங்கள் விற்பனையை தடுக்க வேண்டும் என ஆட்சி யருக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் குறைதீர்வுக் கூட்டம் நேற்று காணொலி காட்சி மூலமாக நடைபெற்றது. ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தார். ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற காணொலி காட்சி கூட்டத்தில் அதிகாரிகள் பங்கேற்றனர். இதில், விவசாயிகள் கலந்துகொண்டு கோரிக்கைகளை தெரிவித்தனர்.

அப்போது விவசாயிகள் பேசும் போது, “விவசாய நிலங்களில் உயர் மின் கோபுரங்கள் அமைக் கப்படுகின்றன. அதற்காக, விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவது இல்லை. நெல் உற்பத்தியில் திருவண்ணாமலை மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. அப்படி இருக்கும்போது, 2 புயலால் பயிர் கள் பாதிக்கப்பட்டுள்ள தி.மலை மாவட்டத்தை பார்வையிடாமல் மத்திய அரசு புறக்கணித்துள்ளது.

வன விலங்குகளால் ஏற்படும் பயிர்ச்சேத இழப்பீடு பெற கால அவகாசத்தை 15 நாட்களாக நீட்டிக்க வேண்டும்.

தரணி சர்க்கரை ஆலை நிர்வாகம், கொள்முதல் செய்யப் பட்ட கரும்புகளுக்கான தொகையை வழங்கவில்லை. அதனை பெற்றுத்தர வேண்டும். கலப்பட உரங்கள் விற்பனையை தடுக்க வேண்டும். விவசாயிகள் பெற்ற கடன் தொகையை தள்ளு படி செய்ய வேண்டும். ஒவ்வொரு கிராமம் வாரியாக கால்நடை சிறப்பு முகாம் நடத்த வேண்டும்.

கீழ்பென்னாத்தூர் வட்டத்தில் நீர் பாசனக் கால்வாய்கள் தூர்ந்து கிடக்கிறது. குப்பநத்தம் அணையில் இருந்து உச்சிமலைக்குப்பம் உட்பட 6 ஏரிகளுக்கு தண்ணீர் வர நடவடிக்கை எடுக்க வேண்டும். செய்யாறு - தென்பெண்ணையாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். பால் கொள்முதல் தொகையை உடனுக்குடன் வழங்க வேண்டும்” என்றனர்.

பயிர் காப்பீடு அவசியம்

ஒரு மாதம் கால அவகாசம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in