அஞ்சலக ஆயுள் காப்பீடு முகவராக டிச.31-க்குள் விண்ணப்பிக்கலாம்

அஞ்சலக ஆயுள் காப்பீடு முகவராக  டிச.31-க்குள் விண்ணப்பிக்கலாம்
Updated on
1 min read

அஞ்சலக ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவராக பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 வயது முதல் 50 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். தங்களுடைய முழு விவரம், பான்கார்டு, ஆதார் சான்று, முகவரிச் சான்று, கல்விச் சான்றிதழ்களுடன் விண்ணப்பங்களைப் பதிவுத்தபால் அல்லது விரைவுத் தபால் மூலம் மட்டுமே அனுப்ப வேண்டும். விண்ணப்பங்களை அருகிலுள்ள அஞ்சலகங்களில் பெற்றுக்கொள்ளலாம் அல்லது domadurai.tn@indiapost.gov.in/ramkumarbaba@gmail.com என்ற இணையதள முகவரி மூலம் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பங்களை டிச.31ம் தேதிக்குள் ‘முதுநிலை அஞ்சலகக் கண்காணிப்பாளர் மதுரைக் கோட்டம், மதுரை 625 002’ என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in