

சேலம் ஓமலூர் அதிமுக அலுவலகத்தில் இன்று (17-ம் தேதி) முதல்வர் பழனிசாமி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
முதல்வர் பழனிசாமி இன்று (17-ம் தேதி) சேலம் பனமரத்துப்பட்டி மற்றும் வாணியம்பாடியில் அம்மா மினி கிளினிக்கை தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து சேலம் மேற்கு சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட ஜாகீர் அம்மாபாளையம், புதுரோடு பகுதியில் அதிமுக கொடியை ஏற்றி வைக்கிறார். பின்னர் அங்கு நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்று மினி கிளினிக்கை தொடங்கிவைக்கிறார்.
மதியம் ஓமலூரில் உள்ள அதிமுக கட்சி அலுவலகம் செல்லும் முதல்வர் அங்கு கட்சி நிர்வாகிகளுடன் வரும் சட்டப்பேரவை தேர்தல் பணி தொடர்பாக ஆலோசனை நடத்துகிறார். இக்கூட்டத்தில் எம்பி, எம்எல்ஏ-க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.