கரூர் பேருந்து நிலைய விவகாரத்தில்அரசு மீது செந்தில்பாலாஜி குற்றச்சாட்டு

கரூர் பேருந்து நிலைய விவகாரத்தில்அரசு மீது செந்தில்பாலாஜி குற்றச்சாட்டு
Updated on
1 min read

கரூர் மாவட்டத்தில் ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' பிரச்சார நிகழ்ச்சி 3-வது நாளாக கிருஷ்ணராயபுரம் தொகுதியில் நேற்று நடைபெற்றது. உப்பிடமங்கலத்தில் மாநில விவசாய அணி செயலாளர் ம.சின்னசாமி, திமுக மாவட்டப் பொறுப்பாளர் வி.செந்தில்பாலாஜி எம்எல்ஏ ஆகியோர் விவசாயிகளை நேற்று சந்தித்து பிரச்சாரம் செய்தனர்.

பின்னர், செந்தில்பாலாஜி செய்தியாளர்களிடம் கூறியது, முதல்வரின் ஆய்வுக்கூட்டம் கரூரில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு எதிர்க்கட்சியைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளை அழைக்கவில்லை.

கரூர் திருமாநிலையூரில் 22 மாதங்களில் புதிய பேருந்து நிலையம் கட்டி முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. ஆனால், 2 ஆண்டுகளாகியும் பேருந்து நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. நீதிமன்ற உத்தரவையே செயல்படுத்தாத அரசு இது.

ஆனால், பேருந்து நிலையத்தை வேறு இடத்துக்கு கொண்டு செல்ல நினைக்கின்றனர் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in