7.5 சதவீத உள் ஒதுக்கீடு சட்டத்தால் வேலூர் மாவட்டத்தில் மருத்துவ படிப்பில் சேர்ந்த 7 மாணவர்கள்

7.5 சதவீத உள் ஒதுக்கீடு சட்டத்தால் வேலூர் மாவட்டத்தில்  மருத்துவ படிப்பில் சேர்ந்த 7 மாணவர்கள்
Updated on
1 min read

தமிழகத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர் களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தால் வேலூர் மாவட்டத்தில் இருந்து 7 பேருக்கு மருத்துவக் கல் லூரிகளில் படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது என ஆட்சியர் சண்முக சுந்தரம் தெரிவித் துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘‘அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர் களுக்கு சீருடைகள், பாடப் புத்தகம், நோட்டுகள், கணித உபகரணங்கள், வண்ண பென் சில்கள், புத்தகப்பை, காலணி, மடிக்கணினி, மிதிவண்டி உள்ளிட்டவற்றை தமிழக அரசு விலையில்லாமல் வழங்கி வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக் கீடு வழங்கும் வகையில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டை வழங்குவதற்கான அரசாணை 2020 அக்டோபர் 29-ம் தேதி வெளியிடப்பட்டது. மருத்துவ படிப்புகளில் சேர தேசிய அளவிலான தகுதித் தேர்வு ‘நீட்’ கட்டாயமாக்கப்பட்ட நிலை யில், அரசு மருத்துவ கல்லூரி களில் அரசுப் பள்ளி மாணவர் களுக்கு போதுமான மருத்துவ கல்விக்கு இடங்களை உறுதி செய்ய வேண்டும் என்ற நிலை இருந்து வந்தது. இதையடுத்து, நாட்டில் வேறெந்த மாநிலத் திலும் செயல்படுத்தப்படாத வகையில் தமிழகத்தில் மட்டுமே மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர் களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கி அரசு சட்டம் இயற்றியது.

இந்த 7.5 சதவீத உள் ஒதுக் கீட்டின் மூலம் வேலூர் மாவட் டத்தில் இருந்து நடப்பாண்டில் பேரணாம்பட்டு அருகே கமலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஆர்.குணசேகரன், பேரணாம்பட்டைச் சேர்ந்த எஸ்.அஸ்வதா, பொன்னை பகுதியைச் சேர்ந்த எம்.வைஷ்ணவி, வேலூர் தோட்டப் பாளையம் பகுதியைச் சேர்ந்த வெ.சினேகா ராய், வேலூர் கொணவட்டத்தைச் சேர்ந்த ம.ரபியாதுல் அத்பியா, பேரணாம்பட்டு வட்டம், குடிப்பல்லி கிராமத்தைச் சேர்ந்த ச.சந்தியா, வேலூர் வேலப்பாடியைச் சேர்ந்த ச.மகாலட்சுமி ஆகிய 7 மாணவ, மாணவிகள் மருத்து வக் கல்லூரிகளில் சேர்ந்துள் ளனர். 7.5 சதவீதம் உள்ஒதுக் கீட்டின் மூலம் மருத்துவக் கல்லூரிகளில் இடம் பிடித் துள்ள இந்த அரசுப் பள்ளி மாணவர்கள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்’’ என தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in