பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு விழிப்புணர்வு பேரணி

பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் தொடர்பான ஒட்டுவில்லைகளை திருநெல்வேலி  ஆட்சியர் விஷ்ணு வெளியிட,  காவல் துறை துணை ஆணையர் சரவணன் பெற்றுக்கொண்டார்.
பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் தொடர்பான ஒட்டுவில்லைகளை திருநெல்வேலி ஆட்சியர் விஷ்ணு வெளியிட, காவல் துறை துணை ஆணையர் சரவணன் பெற்றுக்கொண்டார்.
Updated on
1 min read

திருநெல்வேலி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நிருபயா தினத்தை முன்னிட்டு மாவட்ட சமூக நலத்துறை சார்பில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி, உறுதிமொழி மற்றும் விழிப்புணர்வு ஒட்டுவில்லை வெளியீடு ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றன. மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு தலைமை வகித்தார்.

மாநகர காவல் துணை ஆணையர் ச.சரவணன் முன்னிலை வகித்தார்.

பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் தொடர்பான ஒட்டுவில்லைகளை ஆட்சியர் வெளியிட, காவல்துறை துணை ஆணையர் பெற்றுக்கொண்டார்.

இருசக்கர மோட்டார் வாகன விழிப்புணர்வு பேரணி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொடங்கி, வ.உ.சி மைதானத்தில் நிறைவடைந்தது.

மாவட்ட சமூக நல அலுவலர் சரஸ்வதி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நவாஸ்கான், ரோட்டரி கிளப் தலைவர் கிங்ஸ்டன் ஜேம்ஸ் பால், செயலாளர் பாலாஜி, சரணாலய இயக்குநர் அருட்தந்தை ஜெயபாலன் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in